Kogilavani / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்ற கிராமமான மட்டக்களப்பு-வுணத்தீவு கிராமத்தில், நீண்ட காலாமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு, தற்காலிக தீர்வாக 2 இலட்சம் ரூபாய் பொறுமதியான 15 நீர்தாங்கிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேற்படி தாங்கிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அத்துடன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நீர்தாங்கிளை கையளிக்கும் நிகழ்வு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர் தலைமையில் புதன்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு நீர்தாங்கிளை கையளித்தார்.


31 minute ago
44 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
49 minute ago
55 minute ago