Shanmugan Murugavel / 2016 நவம்பர் 22 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது நேரடிக் காணொளி வசதியை, நேற்றுத் திங்கட்கிழமை (21) இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமிலுள்ள பின்தொடருநர்களுடன் ஈடாடலை மேற்கொள்ள முடியும். இந்தக் காணொளி வசதியில், கருத்துக்களை சேர்க்க முடியுமென்பதுடன், இதயங்களை எல்லையில்லா தொகையில் அனுப்ப முடியும்.
எனினும், இருக்கின்ற ஏனைய நேரடிக் காணொளி வசதிகள் போன்றல்லாது, இன்ஸ்டாகிராமின் நேரடிக் காணொளியானது குறுகிய ஆயுளையே கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு முடிந்தவுடன் அந்தக் காணொளி இல்லமாற் போய்விடும். அந்தக் காணொளியைப் பின்னர் பார்வையிட முடியாது.
இன்ஸ்டாகிராமின் இந்த நேரடிக் காணொளி வசதியானது, குறிப்பிட்டளவான பயனர்களுக்கே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய பயனர்களுக்கு எதிர்வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026