2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

உலகின் மிகச் சிறிய மின்சாரக் கார்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகச் சிறிய மின்சாரக் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வுலிங் நனோ (Wuling Nano) எனப் பெயரிடப்பட்டுள்ள இக் காரானது டாடா நனோ காரை விட சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தியான்ஜின் சர்வதேச கார் கண்காட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இக் காரானது, மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய இக் காரில் 6.6 கிலோவோட் ஏசி அடாப்டர் மூலம் நான்கரை மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளமுடியும் என்றும்  ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும்  என்றும்  அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .