Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகப்பெரிய வியாபாரக் கண்காட்சியான மொபைல் வேர்ல்ட் கொங்கிரஸ், அடுத்த வாரம் இடம்பெறவிருக்கின்ற நிலையில், இதிலேயே, வழமையாக அப்பிள், தனது புதிய திறன்பேசிகளை வெளிப்படுத்துகின்ற நிலையில், அதற்கு முன்பதாகவே சம்ஸுங்கின் புதிய திறன்பேசிகளின் வடிவமைப்புகள் கசிந்துள்ளன.
கசிந்துள்ளவை, பெரும்பாலும் evleaks என அறியப்படும் Evan Blassஇன் டுவிற்றர் கணக்கின் மூலமே வெளியாகியுள்ளன. கடந்த வார இறுதியிலேயே S7 Edge என்று நம்பப்படும் திறன்பேசியின் புகைப்படங்கள் முதலில் வெளியாகியிருந்தது. அப்புகைப்படத்திலிருந்ததன் படி, வெள்ளி, கறுப்பு, தங்க நிறங்களில் S7 Edge இருந்தது. பின்னர், அன்றைய தினம் பிற்பகல் வேளையில் S7 என நம்பப்படும் திறன்பேசியின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட புகைப்படத்தின்படி S7 ஆனது கறுப்பு, தங்க நிறங்களில் இருந்தது.
30 minute ago
37 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
42 minute ago
2 hours ago