Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனா வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹாய்னான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து "பாகுபலி" ரக ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், ராக்கெட் ஏவப்படும்போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக பிரித்து அழைத்து செல்லும் 'அபார்ட் சிஸ்டம்' வெற்றிகரமாக செயல்பட்டது. இதில் விண்கலம் பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
அதேபோல், ராக்கெட்டின் முதல் அடுக்கு திட்டமிட்டபடி செங்குத்தாக கடலில் தரையிறங்கி ஆச்சரியப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் நிலவு பயண போட்டியில் சீனா அடுத்தகட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இது விண்வெளித் துறையில் சீனாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago