Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிட்டத்தட்ட பூமியின் அளவைக் கொண்ட கிரகமொன்றை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கிரகத்தில், திரவ நிலையில் நீர் காணப்படலாமென்ற நம்பிக்கை, அங்கு உயிர்கள் வாழ முடியுமென்ற நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.
பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள புரொக்ஸிமா சென்டௌரி என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கிரகம், பூமியின் 1.3 மடங்கு அளவானது என்பதோடு, திரவ நிலையில் நீர் காணப்படுவதற்கு ஏற்ற தூரத்தில், தனது நட்சத்திலிருந்து காணப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, பேராசிரியர் ஸ்டீபன் ஹோவ்கிங் தலைமையிலான குழுவொன்றுடன் கலந்துரையாடல்களின் ஈடுபட்டு வருவதோடு, அங்கு செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
புரொக்ஸிமா சென்டௌரி என்பது, பூமி அமைந்துள்ள சூரியக் குடும்பத்தின் நட்சத்திரமான சூரியனை விடச் சிறியது, பழைமையானது, குளிர்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
02 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
02 Sep 2025