Freelancer / 2024 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை, சீனா சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ., தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் புல்லட் ரயில் மூலம் பீஜிங்கிலிருந்து- ஷாய்காய்க்கு 4 மணி நேரம் 18 நிமிடத்தில் செல்ல முடியும். புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்கிறது.
தற்போது, அதிவேக பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் சீனா, மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகம் செய்ய களத்தில் இறங்கி உள்ளது. சீன அரசின் தகவல் அலுவலகம் இதை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போது 2 கி.மீ தூரம் வரை நடத்தப்பட்ட சோதனையில், ரயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஹைப்பர் லூப் திட்டம் என்று அழைக்கப்படும் அதிக வேக பறக்கும் ரயிலை ஷாங்க்சி மாகாண அரசு மற்றும் சீனா எரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி உள்ளது. வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு பதிலாக, ரயில் தரையில் பறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கி உள்ளோம் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.S
5 minute ago
12 minute ago
31 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
31 minute ago
58 minute ago