Shanmugan Murugavel / 2016 ஜனவரி 01 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபோன் 6s மற்றும் ஐபோன் 6s பிளஸ் ஆகிவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Live Photosஇன் திறன்களை விரிவாக்கும் வகையில், Live Photosஐ GIF ஆக மாற்றும் செயலி, Alive எனப்படும் Live Photo editor, Lively உள்ளடங்கலாக பல செயலிகள் பாவனையில் உள்ளன.
இந்நிலையிலேயே பிரபலமான நான்காவது தெரிவாக, சுயாதீன மாணவ தயாரிப்பாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட Live Studio வெளிவந்துள்ளது. இந்த செயலியானது முழுமையாக மற்றைய போட்டி செயலிகளை விட ஒரு படி கீழே இருந்தாலும், உங்களது காணொளிகளை GIF ஆக மாற்றுதல், சாதாரண புகைப்படங்களை Live Photos ஆக மாற்றுதல் போன்ற சில தனித்துவமிக்க வசதிகளை வழங்குகின்றது.
பிரதானமாக மேற்படிச் செயலியானது ஐபோனுடைய முகப்புத் திரையில் (lock screen) அசையும் படங்களை (Animation) wallpaper ஆக போடுவதற்குரிய Live Photosஐ தயாரிப்பதற்கு உதவவே தயாரிக்கப்பட்டுள்ளதாக இதனைத் தயாரித்த Aaron Satterfield தெரிவித்துள்ளார். இதன் காரணமாக காணொளியில் உள்ள ஒலிச் சத்தங்களுக்கு இது ஒத்துழைக்காது எனத் தெரிவித்துள்ளார். எனினும் அதையும் சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago