Shanmugan Murugavel / 2016 ஜனவரி 21 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டுப்பகுதியில் Netflixஇன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், Netflixஆனது மேற்படி நான்காவது காலாண்டுப்பகுதியில், புதிதாக, 5.6 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது.
இதில், அமெரிக்காவில் 1.56 மில்லியன், புதிய சந்தாதாரர்கள், கடந்த வருடத்தின், நான்காவது காலாண்டுப் பகுதியில் இணைந்துள்ளனர். மேற்படி எண்ணிக்கையானது, எதிர்பார்க்கப்பட்ட 1.65 மில்லியன் எண்ணிக்கையை விடக் குறைவாயினும் பூகோள ரீதியாக, இதே காலப் பகுதியில் 3.5 மில்லியன் கணக்கானோரே இணைவர் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், 4.04 மில்லியன் கணக்கானோர் புதிதாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடத்தின், மூன்றாவது காலாண்டுப்பகுதியில், Netflixஇன் பெறுபேறுகள், ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில், Netflixஇன் முதலீட்டாளர்கள், தயக்கத்துடன் இருந்திருந்தனர். இந்நிலையில், தற்போதும் உள்ளூரில் (அமெரிக்காவில்), எதிர்பார்க்கப்பட்ட புதிய சந்தாதாரர்கள் இணைந்திருக்காவிட்டாலும், பூகோள ரீதியாக, எதிர்பார்க்கப்பட்டதுக்கும் அதிகமாக, புதிய சந்தாதாரர்கள் இணைந்து கொண்டமையால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், Netflixஇன் பங்குகள், பன்னிரண்டு சதவீதத்தால் உயர்வடைந்திருந்தன.
Netflixஆனது 130 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என Netflixஇன் பிரதம நிறைவேற்றதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் தெரிவித்தமையடுத்தே, பூகோள ரீதியாக Netflixஇன் புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டுப் பகுதியில், ஆறு மில்லியன், புதிய பயனர்களை, புதிதாக இணைத்துக் கொள்வதற்கு Netflix எதிர்பார்த்துள்ளது.
36 minute ago
43 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
48 minute ago
2 hours ago