Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பெற்றோர்களினால் தமது குழந்தைகளை அயலுக்கு கொண்டு செல்லப்பயன்படும் சிவப்பு இழுவைவண்டி தயாரிப்பாளர்களாக அறியப்படும் Radio Flyer ஆனது Teslaவுடன் இணைந்து குழந்தைகளுக்காக சிறிய மின்னியல் Model Sஐ வெளியிடவுள்ளது.
499 ஐக்கிய அமெரிக்க டொலர் மதிப்புடைய குழந்தைகளுக்கான Model Sக்கு தற்போது முற்பதிவு செய்யக்கூடியதாகவுள்ளதுடன், எதிர்வரும் மே மாதத்தில் இது சந்தைக்கு வரவுள்ளது.
ஏனைய Teslaக்களை போன்று, குழந்தைகளுக்கான Model Sஉம் மின்கலங்களாலேயே இயக்கப்படவுள்ளதோடு, இதன் சாதாரண வடிவமைப்பில் 140 Wh லித்தியன் அயன் மின்கலத்தை கொண்டமையவுள்ளதுடன், உங்களுக்கு மேலதிக மின்சக்தி தேவைப்படுமிடத்து, மேலதிகமாக 50 ஐக்கிய அமெரிக்க டொலர்களைச் செலுத்தி 190 Wh மின்கலத்தை பெறமுடியும் என்பதுடன் அதனால் அதன் மின்கல ஆயுட்காலத்தை 50 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள முடியும்.
இதன் உயர்ந்த பட்ச வேகமாக, மணிக்கு ஆறு மைல் தூரம் பயணிக்கவுள்ளநிலையில், மணிக்கு மூன்று மைல் தூரமாக பெற்றோர்களால் வேகத்தை கட்டுப்படுத்தமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நீங்கள் வெள்ளி நிறத்திலும் கரு நீல நிறத்திலும் உங்களது காரை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago