Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பூகோள வெப்பமயமாதலின் காரணமாக, கடந்த 2,800 வருடங்களில் அதிகரித்தமை போன்று சில மடங்குகள் வேகமாக கடல் மட்டங்கள் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நூற்றாண்டுகளாக, ஆயிரம் வருடங்களாக உயர்வடையும், வீழ்ச்சியடையும் கடல் மட்டங்களை கணிப்பிடுவதற்காக, பூகோளரீதியில் 24 மையங்களில் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே மேற்படி தகவல்கள் தெரியவந்துள்ளன.
1880ஆம் ஆண்டு கைத்தொழில் புரட்சி ஏற்படும் வரையிலும், நூற்றாண்டு ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு சதமமீற்றரே வேகமான கடல் மட்ட உயர்வே இருந்ததாக கூறப்படுகிறது. மேற்படித் தரவானது, சில வேளைகளில் ஒரு சதமமீற்றரால் அதிகரித்து அல்லது குறைந்து காணப்பட்டது.
மேற்படிக் காலகட்டத்தில் இருந்த 2,000 வருடங்களில் சராசரியாக, பூகோள ரீதியில் கடல் மட்டமானது 7.62 சதமமீற்றரை விட அதிக உயர்வாகவோ தாழ்வாகவோ செல்லாத நிலையில், 20ஆவது நூற்றாண்டில் உலக கடல் மட்டம், 14 சதமமீற்றரால் உயர்ந்துள்ளது.
1993ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ள கடல் மட்டும் உயர்வடையும் வீதமானது அதிகரித்து, தற்போது 30 சதமமீற்றராக உள்ளதாக கடந்த திங்கட்கிழமை (22) வெளியான விஞ்ஞானத்துக்கான தேசிய அகடமி சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பூமியிலுள்ள தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் வெப்பமான வாயுவை பொறுத்து, உலகிலுள்ள சமுத்திரங்களின் மட்டமானது, 28 சதமமீற்றரில் இருந்து 131 சதமமீற்றராக 2100ஆம் ஆண்டளவில் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago
47 minute ago