Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.web domainஐ உரிமப்படுத்துவதற்கான ஏலமானது, .web domain உரிமத்துக்காக ஒரு நிறுவனம், 135 ஐக்கிய அமெரிக்க டொலரை செலுத்துவதோடு நிறைவுக்கு வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட ஏலத்தில் வென்ற Nu Dot Co என்ற நிறுவனம், இனிமேல், .web என்று முடிவுறுகின்ற domain உரிமங்களை, ஏனைய நிறுவனங்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக சாதனை ரீதியாக, 41.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்ட .shop domaiனுக்கும் மூன்று மடங்கு அதிகமான தொகைக்கே தற்போது .web domain விற்கப்பட்டுள்ளது.
.web domainக்கான ஏலத்தில், கூகுள், இணைய பதிவு நிறுவனங்களான Afilias, Radix, Donuts உள்ளிட்ட நிறுவனங்களும் போட்டியிட போதும் இவை தோல்வியடைந்திருந்தன.
பெறுமதி வாய்ந்த பிற்சேர்க்கை domainகளை விற்கும் செயற்பாடானது 2012ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்த நிலையில், தற்போதே domainகளை வேண்டுவதற்கு பல நிறுவனங்கள் போட்டியிடுகின்ற நிலையிலேயே, தற்போது domainகளின் விலையானது எதிர்பார்க்காதளவுக்கு காணப்படுகின்றது.
இதேவேளை, நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட எதிர்பார்க்கப்படும் மேலும் 16 domaniகள் இன்னும் விற்பனைக்கு வர காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
26 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
39 minute ago
2 hours ago