Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அரசாங்கத்தின் கண்காணிப்பு அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து தகவல் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் அச்சப்படுகையில், தொடர்பாடலில், உலகில் பிரபலமிக்க நாமங்களில் ஒன்றான பேஸ்புக்கின் WhatsApp, முழுமையாக encrypte செய்யப்பட்ட காணொளி அழைப்பு வசதியை, தனது தகவல் பரிமாற்றச் செயலியில், நேற்றுத் திங்கட்கிழமை (14) இணைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள WhatsApp, இவ்வாண்டு ஆரம்பத்தில், end-to-end encryptionக்கு சென்றிருந்தது. இதன் மூலம், WhatsApp நிறுவனமோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ, தொழில்நுட்ப ரீதியாக தகவல்களை வாசிக்க முடியாது அல்லது அழைப்புகளைக் கேட்க முடியாமல் போயிருந்தது.
தனிப்பட்டவர்களின் தொடர்புகள் பட்டியல் போன்ற தரவுகளை WhatsApp வைத்திருக்கின்றபோதும், புதிய காணொளி அழைப்புச் சேவையின் மூலம், ஒட்டுக்கேட்கும் அச்சம் இல்லாமல் மக்கள் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி அழைப்புகள் வசதியானது, இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சில மணித்தியாலங்களில், குறித்த சேவையானது, 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என WhatsApp-இன் இணை நிறுவுநரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான ஜான் கூம், நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், குறித்த காணொளி அழைப்பு வசதியானது இலங்கையில் கிடைக்கப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாகூவில் நீண்ட காலம் பொறியியலாளர்களாகவிருந்த ஜான் கூம், பிரயன் அக்டனினால், 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட WhatsAppஐ, 2014ஆம் ஆண்டு பேஸ்புக் வாங்கியிருந்தது. பேஸ்புக் வாங்கும்போது 50 பேராகவிருந்த WhatsApp-இன் பணியாளர் குழு, தற்போது 200 பேரைக் கொண்டுள்ளது. இதில், பெரும்பாலோனோர் பொறியியளாளர்கள் என்பதோடு, மிகுதிப் பேர், வாடிக்கையாளர் சேவையினர் ஆவர்.
பேஸ்புக்கினால் WhatsApp வாங்கப்பட்டபோதும், ஓரளவு தனித்துவமாகவே இயங்குகின்றது. இந்நிலையில், குரல் மற்றும் தற்போது காணொளி அழைப்புகளுக்காக, உலகம் முழுவதிலுமுள்ள, தனது வழங்கிகள், அலைத்தொகுப்பை பயன்படுத்த பேஸ்புக் அனுமதித்துள்ளதாக கூம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago