Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்துறையில் அனுபவமிக்க சுஜீவன், பிரதீபன், ஜயநாத் ஆகிய மூன்று பேரைக் கொண்ட அணியாகிய TechErupt, WebRTC மற்றும் இணையத்தள தொழில்நுட்ப உதவி கொண்டு உருவாக்கப்பட்ட “SmArtValley” எனும் படைப்பினை உருவாக்கியிருந்தனர்.
தொழில்முனைவோர்களின் கனவுகளை நனவாக்குவத்தில் உள்ள தடைகளை தொழில்நுட்ப உதவியுடன் நிவர்த்தி செய்யும் முகமாக, தொழில் முனைவொன்றுக்கு தேவைப்படும் மூலதனம், விளம்பரப்படுத்தல், கணக்காய்வு, சட்ட ஆலோசனைகள் ஆகிய அனைத்தையும் ஒரே தளத்தில் பெறக்கூடிய இவ்விணையத்தளம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, தொழிமுனைவோர் உலகின் எந்த முலையிலும் உள்ள ஒரு முதலீட்டாளரை அணுகும் வகையில், WebRTC உதவியுடன் நிகழ்நேர காணொளித் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடியது இப்படைப்பின் சிறப்பாகும் .
இவ்வணியின் நோக்கமானது, உலகின் எந்தவொரு மூலையில் தொழில்முனைவோர் இருந்தாலும் சரியான ஒரு சேவையை தேர்ந்தெடுக்க வழிசமைப்பதாகும். மேலும், நேரடியாகத் தொடர்பு கொண்டு மூலதனம் பெற்ற தொழிலொன்றுக்குத் தேவையான விளம்பரப்படுத்தல்,கணக்காய்வு,சட்ட ஆலோசனைகள் போன்ற சேவைகளை இலகுவில் தேர்தெடுக்கவும் இந்த இணையத்தளம் உதவுகிறது. தேவையுள்ள இப்படைப்புக்கு உலகெங்கும் வரவேற்பிருக்கும் என்பதில் ஐயமில்லை.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago