Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 22 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான முதலாவது e-sports சம்பியன்ஷிப்பான SLT e-Sports Reid Cyber Wars 2.0, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘Moratu Yakku’ என்ற அணியானது Call of Duty பட்டத்தை வென்றிருந்தது. இவ்வணியில் பிரவீன் செனவிரட்னே, கசுன் சுரிந்து, சுடித ஷமிக, மலித் கல்லகே, பிரமோத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தவிர, Mortal Kombat – Xஇன் பெண்களில் வெற்றியாளராக கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிலினி வீரசிங்கே தெரிவானதோடு, ஆண்களில் அணியில் வெற்றியாளராக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் டுலாஜ் குணவர்த்தன தெரிவானார்.
இது தவிர Need For Speed பட்டத்தை பெண்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சந்துனி விக்கிரமசிங்க வென்றதோடு ஆண்களில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புத்திக சமீர கருணாரத்ன வென்றிருந்தார்.
வெற்றியாளர்களுக்கு கிண்ணங்களும் சான்றிதழ்களும் பெறுமதியான பணப்பரிசுகளும் வழங்கப்பட்டிருந்த நிலையில், வெற்றியாளர்கள் அனைவருக்கும் அவர்களின் அடைவுகளுக்காக SLT வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் IEEE மாணவர் கிளையின் கூட்டிணைப்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட SLT e-Sports Reid Cyber Wars 2.0க்கு SLTஇன் fibre optic broadband connectivity ஆதரவு வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 minute ago
8 minute ago
2 hours ago