Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 09 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால், பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது.
மனிதனை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆந்திர மாநிலம் - ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், 'பேட் அபார்ட் டெஸ்ட்' என்ற சோதனை நடைபெற்றது. அதன்படி, 12.6 டன் எடை கொண்ட ஆளில்லா விண்கலமானது விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்கலம் 2.7 கி.மீ தூரத்தை அடைந்தவுடன் வங்காள விரிகுடா கடலில் விழும் வகையில் திருப்பிவிடப்பட்டது. அப்போது விண்கலத்தில் விஞ்ஞானிகள், மனிதர்கள் இருக்கும் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2.9 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்தது. இந்த சோதனை 259 விநாடிகளில் முடிந்தது.
இதற்கு முன்பாக 2014 ஆம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி மாக்-3 ராக்கெட் மூலம் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது. தற்போது வரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
அந்தவகையில், இந்தியாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பினால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட 4 ஆவது நாடு என்ற பெருமையைப் பெறும். இந்த திட்டத்துக்கு சுமார் 17,000 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
23 minute ago
36 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago
54 minute ago
1 hours ago