Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 மே 19 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களின் துணை பணிக்குச் சென்று கொண்டிருக்கையிலோ, உங்களது மகள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதோ அல்லது உங்களது பெற்றோர் வைத்தியரிடம் சென்று கொண்டிருக்கும்போதோ நீங்கள் விரும்புவர்களுடன் நீங்கள் பயணிக்காதபோது அவர்களின் கட்டணத்தை மட்டுமே, கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஊபரின் Family Profiles மூலம் இதுவரையில் செலுத்தக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில், Family Profilesஐ Trip Tracker மூலம் இன்னொரு படிக்கு ஊபர் கொண்டு சென்றுள்ளது. Trip Trackerஇன் மூலம், உங்களுடைய Family Profilesகளிலுள்ளவர்களில் எவரும் சவாரியை மேற்கொள்ளும்போது அந்த Family Profilesக்கு உரித்துடையவருக்கு தானாகவே அறிவித்தல்கள் கிடைக்கப் பெறுவதுடன், அந்தச் சவாரியை வரைபடத்துடன் தொடரவும் முடியும்.
ஊபரினால் மின்னஞ்சலில் அனுப்பப்படும் பற்றுச்சீட்டில் மேற்கூறப்பட்ட தகவல்கள் முன்னரே கிடைக்கப் பெற்றிருந்தாலும், தற்போது, Trip Tracker மூலம் நிகழ்காலத்திலேயே மேற்கூறப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெறவுள்ளன.
அட்லாண்டா, டல்லாஸ், போனிக்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களிலேயே Family Profiles ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் பிரபலமாகியுள்ள மேற்படி வசதியானது 60க்கு மேற்பட்ட நாடுகளில் உலகளவில் காணப்படுவதாக ஊபர் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, மெக்ஸிக்கோ, இந்தோனேஷியா, கொலம்பியா ஆகிய நாடுகளே அதிகளவிலான Family Profilesகளை கொண்டிருப்பதுடன், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலேயே அதிகமான மக்கள் Family Profilesகளுடன் காணப்படுகின்றனர்.
இறுதியாக வெளிவந்துள்ள ஊபர் செயலியின் பதிப்பிலே Trip Trackerஐ சவாரி செய்பவர்கள் பயன்படுத்தலாம் என ஊபர் தெரிவித்துள்ளது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago