Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
Napalm தாக்குதலொன்றிலிருந்து ஓடுகின்ற நிர்வாணச் சிறுமியினுடைய வியட்னாம் யுத்தத்தின் வரலாற்றுப் புகைப்படத்தை அழித்த தவறிலிருந்து பேஸ்புக் கற்றுக் கொள்ளப் போவதாக அந்நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் நிர்வாணம் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியிருந்ததன் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட புகைப்படமானது, நோர்வேப் பிரதமரான எர்னா சொல்பேர்க் உள்ளிட்ட சிலரின் கணக்குகளிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (09) நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பேஸ்புக்கின் தணிக்கை முறையையும் வரலாற்றை திருத்துதலையும் சொல்பேர்க் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், குறித்த புகைப்படமானது, பின்னர் மீள அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவை கடினமான முடிவுகள் என்றும் எப்பொழுதும் நாங்கள் சரியாக எடுப்பதில்லை என பிரதமருக்கு பேஸ்புக்கின் தலைமை நடவடிக்கை அதிகாரி ஷெரைல் சன்ட்பேர்க் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவான நடைமுறைகளிலும், ஒவ்வொரு வாரமும், மில்லியன் கணக்கான பதிவுகளை சோதிப்பது சவாலானது என்று சன்ட்பேர்க் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தாங்கள் மேலும் சிறப்பாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும், தாங்கள் தமது சமூகத்தை கேட்கத் தயாராகவிருப்பதாகவும் மாற்றமடையத் தயாராகவிருப்பதாகவும், இதில், தாங்கள் சரியாக இருப்பதற்கு உதவியதற்கு நன்றி என்று சன்ட்பேர்க் மேலும் தெரிவித்ததோடு, இந்தக் கடிதமானது, இந்த விடயத்தை நாங்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்தோம், கையாண்டோம் என்பதற்கு உதாரணம் என்று கூறியுள்ளார்.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025