2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரி.லோஹித்)

கிழக்கு மாகாணத்தின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேக பெருவிழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

சாந்தி பூஜையுடன் ஆரம்பமான கிரியைகளில் சங்குகளுக்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன், விசேட யாக பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து, விசேட அபிஷேக பூஜை நடைபெற்று கும்பம் ஆலய வலம் வந்து மூலவிக்கிரகத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

சிவசுப்ரமணியப் பெருமானுக்கும் விசேட  பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .