2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

செவிடன் காதில் ஊதிய சங்கு

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் தலைவர், எதிர்வரும் தேர்தலில், கைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமென்ற யோசனையை, ரஜரட்ட கட்சிக் கூட்டத்தின் போது தீர்மானமாக நிறைவேற்றிக்கொண்டார்.

“துமி”யினால் கொண்டுவரப்பட்ட இந்த யோசனை நிறைவேற்றப்படும் போது, கட்சியின் பொதுச் செயலாளரும், அந்த இடத்தில் தான் இருந்தாராம்.

எவ்வாறாயினும், கையும் மொட்டும் சேர்ந்துப் பயணிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மேற்படி யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“துமி”யின் இந்த வேலையைப் பார்த்து, எஸ்.பீயும் டிலானும், கடும் கோபத்தில் இருந்தார்களாம். அன்று மாலை வேளையிலேயே, “துமி”க்கு அழைப்பை மேற்கொண்டுள்ள இவர்கள் இருவரும், போதும் போதுமென்ற அளவுக்கு, திட்டத் தீர்த்தார்களாம். செவிடன் காதில் ஊதிய சங்கு போல,? “ம்...” என்ற சத்தம்கூட போடாமல், கேட்டுக்கொண்டிருந்தாராம் த“துமி”. ஓயாமல் திட்டிக்கொண்டிருந்த இருவரும், வாய் வலிக்கத் தொடங்கியதும், தொலைபேசியைத் துண்டித்தார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X