Editorial / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1903:கனடாவில் பாரிய மண்சரிவினால் 70 பேர் பலி.
1945: இரண்டாம் உலகயுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி ஆகியன நேச நாடுகளிடம் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தன.

1945: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தனது நீண்டகால காதலியான ஈவா புரோனை பதுங்குக் குழியொன்றில் வைத்து திருமணம் செய்தார்.
1946: ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஹிடேகி டோஜோ மற்றும் 28 முன்னாள் ஜப்பானிய தலைவர்கள் போர்க்குற்றச்சாட்டு விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
1953: அமெரிக்காவில் முதல் தடவையாக பரீட்சார்த்த முப்பரிமா தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்பட்டது.
1970: வியட்கொங் கெரில்லாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக அமெரிக்க, தென் வியட்னாம் படைகள் கம்போடியாவுக்குள் படையெடுத்தன.
1986: லொஸ் ஏஞ்சல்ஸ் பொதுநூல் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 400,000 நூல்கள் எரிந்தன.
1991: பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய சூறாவளியினால் 138,000 பேர் பலி. ஒரு கோடி பேர் வீடுகளை இழந்தனர்.
1992: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கறுப்பின கார் சாரதியொருவரை தாக்கிய பொலிஸார் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இடம்பெற்ற பாரிய வன்முறைகளில் 53 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
1997: 1993 ஆம் ஆண்டின் இரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
2004: செப்டெம்பர்11 தாக்குதல் தொடர்பான விசாரணைக்குழுவிம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், உப ஜனாதிபதி டிக் செனி ஆகியோர் சாட்சியமளித்தனர்.
2005: லெபனானில் 29 வருடங்களாக நிலைக்கொண்டிருந்த சிரிய படையினர் வாபஸ் பெற்றனர்.
7 minute ago
14 minute ago
48 minute ago
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
48 minute ago
12 Nov 2025