Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : பிலிப்பைன் - அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.
1908 : ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
1928 : சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.
1930 : குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.
1939 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.
1939 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜேர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
1941 : ஈரான் மீதான ஆங்கில - சோவியத் படையெடுப்பு - சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.
1944 : மார்க்கெட் கார்டன் நடவடிக்கை - நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.
1944 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.
1948 : ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
1949 : டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
1965 : பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1974 : வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
1976 : நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
1978 : இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1980 : போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 : நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.
1988 : தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
1991 : எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1991 : லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
1997 : பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2004 : இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
2011 : வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.
23 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
42 minute ago