Mithuna / 2024 பெப்ரவரி 10 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1258: பாக்தாத் நகரம் மொங்கோலியர்களிடம் வீழ்ச்சியடைந்தது.
1763: பாரிஸ் உடன்படிக்கையின் மூலம், கனடாவின் கியூபெக் பிராந்தியத்தை இங்கிலாந்துக்கு பிரான்ஸ் விட்டுக்கொடுத்து.
1840: பிரிட்டனின் விக்டோரியா மகாhணியார் இளவரசர் அல்பர்ட்டை திருமணம் செய்தார்.
1846: இந்தியாவில் முதலாவது ஆங்கில சீக்கிய யுத்தம் நடைபெற்றது. ஆங்கிலேயேர் வெற்றி பெற்றனர்.
1870: நியூயோர்க்கில் வை.எம்.சி.ஏ. அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1952: இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
1962: சோவியத் யூனியனினால் கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவு விமான விமானியும்; அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட சோவியத் உளவாளி ருடோல்வ் ஆபெல்லும் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
1996: கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புள10 கணினி முதல் தடவையாக செஸ் போட்டியில் தோற்கடித்தது.

2005: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் கமீலா பார்க்கரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிரித்தானிய அரசகுடும்பம் அறிவித்தது.
2009: ரஷ்யாவின் கொஸ்மோஸ் 2251 செய்மதியும் அமெரிக்காவின் இரிடியம் 33 செய்மதியும் விண்வெளியில் தற்செயலாக மோதி சிதறின.
14 minute ago
21 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
25 minute ago