Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜனவரி 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1500: வின்சென்ட் பின்ஸோன் என்பவர் பிரேஸிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியரானார்.
1531: போர்த்துகலின் லிஸ்பன் நகரில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பலி.
1788: பிரித்தானிய தளபதி தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் தொகுதி கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தற்போதைய சிட்னி துறைமுகப் பகுதியை அடைந்தன. இத்தினம் அவுஸ்திரேலிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
1930: இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ஆம் திகதியை பூரண சுவராஜ் தினமாக பிரகடனப்படுத்தியது. 20 வருடங்களின்பின் இந்தியா குடியரசாகியது.
1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1950: இந்தியா குடியரசாகியது. ராஜேந்திர பிரசாத் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1958: ஜப்பானிய கப்பலொன்று கவிழ்ந்தால் 167 பேர் பலி.
1965: இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்பட்டது.
1980: இஸ்ரேல் - எகிப்து மோதல் தவிர்ப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.
1992:அமெரிக்க நகரங்களை ரஷ்யாவின் அணுவாயுதங்கள் இலக்குவைப்பதை ரஷ்யா நிறுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி பொரிஸ் யெல்டசின் அறிவித்தார்.
1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
2001: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.
2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago