Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1306: ரொபர்ட் புரூஸ், ஸ்கொட்லாந்தின் மன்னரானார்.
1655: சனி கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான டைட்டான் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1807: பிரிட்டனில் அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது.
1911: நியூயோர்க் ஆடைத்தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1947: அமெரிக்காவின் இலினோய்ஸ் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 111 பேர் பலி.
1975: சவூதி அரேபிய மன்னர் பைஸால், அவரின் ஒன்றுவிட்ட சகோதரின் மகனினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2002: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி காரணமாக ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
2011: கனேடிய பிரதமர் ஸ்டீபர் ஹாபரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவ்வரசாங்கம் தோல்வி கண்டது.
2013: 11 மில்லியன் டொலர்களை திருடினார் என்ற குற்றச்சாட்டில் ஸாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி ருபியா பண்டா, கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .