Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மே 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
526: சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 3 லட்சம் பேர் பலியாகினர்.
1835: நவீன கிறீஸின் முதலாவது மன்னராக ஒட்டோ தெரிவு செய்யப்பட்டார்.
1902: அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது.
1932: அமேலியா எர்ஹார்ட் எனும் பெண், அத்திலாந்திக் சமுத்திரத்தை தனியாக விமானத்தில் கடக்கும் பயணத்தை கனடாவிலிருந்து ஆரம்பித்தார். மறுநாள் அவர் அயர்லாந்தை வந்தடைந்தார்.
1940: போலந்தின் அஸ்விட்ஸ் நகரில் ஜேர்மனியின் நாஜி ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட வதை முகாம்களுக்கு கைதிகள் கொண்டுவரப்படத் தொடங்கினர்.
1965: பாகிஸ்தானின் விமானமொன்று எகிப்தின் கெய்ரோ நகரில் விபத்துக்குள்ளானதால் 119 பேர் பலி.
1980: கனடாவிலிருந்து கியூபெக் மாநிலம் தனிநாடாக பிரிவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் பிரிவிணைக்கு எதிராக 60 சதவீத கியூபெக் மக்கள் வாக்களித்தனர்.
2000: பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்- செரி பிளேயர் தம்பதிக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. 150 வருடகாலத்தில் பதவியிலிருக்கும் போது தந்தையாகிய முதலாவது பிரித்தானிய பிரதமரானார் டொனி பிளேயர்.
2002: கிழக்குத் திமோர் தனிநாடாகியதை போர்த்துக்கல் அங்கீகரித்ததன் மூலம் கிழக்குத் திமோரில் 23 வருடகால இந்தோனேஷிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
2012: வட இத்தாலியில் இடம்பெற்ற 6.0 ரிச்டர் அளவிலாள நிலஅதிர்வினால் 27பேர் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
2014: நைஜீரியாவின் ஜோஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 118பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
49 minute ago
2 hours ago