Menaka Mookandi / 2016 ஜனவரி 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1607: பிலிப்பைன்ஸின் மிகப்பழைமையான தேவாலயமான சான் அகஸ்ட்டின் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.
1806: நன்னம்பிக்கை முனையை பிரிட்டன் கைப்பற்றியது.
1939: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி ஏடன் நகரை கைப்ற்றியது.
1883: தோமஸ் அல்வா எடிஸனால் அமைக்கப்பட்ட முதலாவது மின்சார ஒளியூட்டல் தொகுதி அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் செயற்பட ஆரம்பித்தது.
1899: ஆங்கிலோ எகிப்து சூடான் ஸ்தாபிக்கப்பட்டது.
1935: ஆண்களுக்கான பிரீவ் வகை உள்ளாடை உலகில் முதல் தடவையாக கூப்பர்ஸ் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்பட்டது.
1942: பர்மாவை ஜப்பான் ஆக்கிரமித்தது.
1945: சோவியத் படைகள் லோட்ஸ்கெட்டோ நகரை நாஸிகளிடமிருந்து விடுவித்தனர். இந்நகரின் 2 லட்சம் குடியிருப்பாளர்களில் சுமார் 900 பேரே உயிர்தப்பினர்.
1946: ஜப்பானிய யுத்த குற்றவாளிகளை விசாரிப்பதற்காக டோக்கியோவில் சர்வதேச இராணுவ விசாரணைக் குழுவொன்றை அமெரிக்க தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர்
1949:கியூபாவை இஸ்ரேல் அங்கீகரித்தது.
1952: ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க - ஈரானிய அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டது.
1966: இந்தியாவில் பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்ற போட்டியில் இந்திரா காந்திர வெற்றி பெற்றார்.
1981: ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
1983: நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
1986: முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.
1993: வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது.
1993: ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.
1997: 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.
2006: சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.
2006: புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.
2007: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026