Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1938 – நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.
1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
1947 – பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.[2]
1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.
1970 – அமெரிக்காவில் பொது ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
1988 – சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.
1991 – இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.
1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
2008 – கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.
2011 – மேக்கொங் ஆற்றில் இரண்டு சீன சரக்குப் படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
4 hours ago