Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1813: ட்ரெஸ்டன் யுத்தத்தில் பாரிய ஆஸ்திரிய, ரஷ்ய படைகளை பிரெஞ்சு மன்னன் நெப்போலியனின் படைகள் தோற்கடித்தன.
1859: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதலாவது வெற்றிகரமான வர்த்தக எண்ணெய் கிணறு அமைக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது.
1986: பிரிட்டன் - ஸான்ஸிபார் நாடுகளுக்கிடையிலான யுததம் 45 நிமிடங்களில் முடிவுற்றது.
1916: ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக ருமேனியா போர்ப் பிரகடனம் செய்தது.
1921: அரேபிய கிளர்ச்சியத் தலைவரின் மகனை ஈராக்கின் மன்னர் முதலாம் பைஸாலாக பிரிட்டன் நியமித்தது.
1971: சாட் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்சி முயற்சி தோல்வியுற்றது.
1979: இந்தியாவுக்கான பிரிட்டனின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர் நாயகமுமாக பணியாற்றிய மௌன்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ. போராளிகளின் குண்டுத் தாக்குதலில் பலியானார்.
1991: சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக மோல்டோவா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2003: செவ்வாய் கிரகம் பூமிக்கு 55,758,005 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது. 60,000 வருடகாலத்தில் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக காணப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
4 hours ago