Janu / 2023 ஜூன் 08 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1783: ஐஸ்லாந்தின் லேக்கி எரிமலை வெடித்தது. தொடர்ச்சியாக 8 மாதங்கள் எரிமலை குழம்பு வெளியாகிய நிலையில் சுமார் 9000 பேர் பலியாகினர். 7 வருடகால பஞ்சம் ஆரம்பித்தது.
1941: 2 ஆம் உலக யுத்தத்தில் சிரியா, லெபனான் மீது நேச நாடுகள படையெடுத்தன.
1953: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டோர்னடோ சுழற்காற்றினால் 115 பேர் பலி.
1959: அமெரிக்க தபால் திணைக்களம் ஏவுகணை மூலம் தபால் அனுப்புவதற்கான சோதனையை மேற்கொண்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பார்பெரோவிலிருந்து தபால்கள் அடங்கிய ஏவுகணையொன்று ஏவப்பட்டது. எனினும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.
1984: அவுஸ்திரேலியாவின் நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.
1992: முதலாவது உலக கடல் நாள் கொண்டாடப்பட்டது.
1995: படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
2006: அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
2007: அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
2007: இலங்கையின் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
2007: அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2009: வட கொரியாவுக்கு அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில், அமெரிக்கா ஊடகவியலாளர்கள் இருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

14 minute ago
23 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
27 minute ago
31 minute ago