Mayu / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் நகை, பணம் மற்றும் பொருட்களைத் திருடி வந்த நான்கு சந்தேகநபர்களை யாழ். தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் நகரின் மத்தியிலுள்ள நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியிலுள்ள கடை ஒன்றில், சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வளையல்கள் திருடப்பட்டிருந்தன. அதேபோன்று, யாழ். கட்டைப்பிராய் அம்மன் கோயில் வீதிக்கு அருகிலுள்ள வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள், மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (06) நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
10 minute ago
12 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
42 minute ago