2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருதில் திடீர் சுகாதார பரிசோதனை

Mayu   / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் சனிக்கிழமை (04) விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்தப் பரிசோதனைகளின் போது, நுகர்வுக்குத் தகுதியற்ற நிலையில் காணப்பட்ட சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பழுதடைந்த மரக்கறிகள் கண்டறியப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு, அவை அனைத்தும் அவ்விடத்திலேயே உடனடியாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

விற்பனையாளர்களுக்குப் பின்வரும் விடயங்கள் குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் (PHI) நேரடி ஆலோசனைகள் வழங்கப்பட்டன:

சுகாதார விதிமுறைகளைப் பேணுதல்.

உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள்.

விற்பனை நிலையத்தைச் சுத்தமாகப் பராமரித்தல்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலின் கீழும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் திட்டமிடலுக்கும் இணங்க இந்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது தங்களின் முதன்மையான பொறுப்பு என்பதால், இத்தகைய திடீர்ச் சோதனைகள் வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார வைத்திய அதிகாரி இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாறுக் ஷிஹான்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .