Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2024 மார்ச் 05 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (05) காலை நாடு திரும்பிய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், மீண்டும் பாராளுமன்றத்துக்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை தாம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புவதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ, ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது என்றும் கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம். சில இடங்களில் தவறு செய்கிறோம். மக்கள் நாங்கள் சொல்வதை ஏற்க மாட்டார்கள். சில சமயங்களில் மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்காத சந்தர்ப்பங்களும் உள்ளன. அவற்றை நாங்கள் திருத்திக்கொள்கின்றோம்." என்றார்.
31 Jul 2025
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jul 2025
31 Jul 2025