Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவ பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர் ஒருவருடைய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டுத் தோட்டத்தில் பிளாஸ்டிக் வாளியில் கிரீஸ் இட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொடை பகுதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த மல்வத்தே மஞ்சு என்பவருக்கு சொந்தமான துப்பாக்கியே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்கான குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago