Editorial / 2020 ஜூலை 30 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அல்ல, மூன்று அல்ல, நான்கு அல்ல ஒரு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இலங்கையில் இன்று உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி 54 உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்க முடிவு செய்தது. இது இலகுவாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. மிகவும் யோசித்து எடுக்கப்பட்ட தீர்மானம்.
ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காக என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். சத்தமிட்டு பயனில்லை என்பது நமக்கு தெரியும்.
கட்சி நல்லது இல்லையென்றால் தயவு செய்து வெளியேறி வேறு கட்சியை உருவாக்குங்கள். நாங்கள் போட்டியிடுகின்றோம். அதில் பிரச்சினை இல்லை . உள்ளேயிருந்து தீங்கு விளைவிக்காதீர்கள்” என்றார்.
5 minute ago
13 minute ago
22 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
22 minute ago
54 minute ago