2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 34ஆவது பொதுக்கூட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை - அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பததென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் 34ஆவது வருடப் பொதுக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை அக்கரைப்பற்றிலுள்ள சம்மேளனக் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளத் தலைவர் கலாபூஷண் ஆசுகவி அன்புடீன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 2013 ஆம் ஆண்டுக்கான நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.

இதற்கிணங்க, டொக்டர் ஏ.எல். அஹமட்லெப்பை சம்மேளனத்தின் தலைவராகவும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் யூ.எம். நியாஸி செயலாளராகவும், எம்.ஏ.ஏ. நஜீப் பொருளாளராகவும், அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், கலாபூஷண் பாலமுனை பாறூக் அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்தவகையில், மொத்தமாக 27 பேர் சம்மேளனத்தின் நிருவாகத்துக்கென தெரிவாகினர். இந்நிகழ்வில், சம்மேளனத்தினால் 2013 ஆம் வருடத்திற்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடு, ஆகியவையும் வெளியிடப்பட்டன.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசிய உபதலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.


  Comments - 0

  • Nafeel Sunday, 30 December 2012 01:20 AM

    பொதுக் கூட்டம்? வாலிப முன்னணி???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X