2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் நெல் வயல் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் நேற்றுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.சனீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் மாத்திரம் 4250 ஏக்கர் நெல் வயல் பாதிக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனையிலேயே அதிகளவில் நெல்வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆயினும், வெள்ளத்தில் மூழ்கிய நெல் வயல்களில் சுமார் 90 சதவீதமானவற்றில் வெள்ளம் வடிந்துள்ளது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 02 இலட்சத்து 7500 ஏக்கர் (83 ஆயிரம் ஹெக்டயர்) காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அட்டாளைச்சேனையில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் (32 ஆயிரம் ஹெக்டயர்) காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் தமண பிரதேசத்தில் வீசிய கடும் காற்றுக் காரணமாக சுமார் 500 ஏக்கர் சோளப் பயிர்ச் செய்கை  பாதிப்புக்குள்ளானதாகவும் அம்பாறை மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X