2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பரீட்சை எழுதிவிட்டு வீட்டு திரும்ப முடியாமல் 150 மாணவர்கள் பரிதவிப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு செல்லமுடியாது பரீட்சார்த்திகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பரீடசை எழுதிவிட்டு வீட்டுக்கு போமுடியாமல் 150 மாணவர்கள் மாஹஓயாவில் பரிதவித்துள்ளனர்.

இவர்களில் 50 மாணவர்களுக்கு மாஹஓயா பெல்லங்வில விஹாரையிலும் மாணவிகள் 100 பேர் மாஹஓயா பிரதேச செயலகத்திலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு உடை,தங்குமிட வசதிகளை கொடுத்து செவ்வாய்க்கிழமை பரீட்சைக்கு தோற்றும் வகையில் வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாஹஓயா பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X