Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவந்த மழை வெள்ளத்தினால் 20 பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள 4 இலட்சத்து 41ஆயிரத்து 756 பேர் பாதிக்கப்பட்டள்ளதுடன் 135 முகாம்களில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 944பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாற் தெரிவித்தார்.
இதேவேளை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8,577 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 512 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தள்ளதுடன் 955 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும 3,938 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 3 சிறிய விவசாய குளங்கள் உடைந்தள்ளதுடன் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட வோளாண்மையும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வெள்ளம் பல பிரதேசங்களில் சிறிதளவு குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025