2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட அடிப்படை வசதிகளுக்காக 700 மில்லியன் ரூபாய்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

கிழக்கு மாகாண மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை அரச அதிபர் சுனில் கனனங்கரா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்கு 47 மில்லியன் ரூபாவும் வாழ்வாதார அபிவிருத்திக்கு 23 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்திலுள்ள 18 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கிராமசேவை அதிகாரிகள் பிரிவினைச் சேர்ந்த 8,632 குடும்பங்கள் இத்திட்டத்தினால் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .