2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மத்தியமுகாம் பிரதேசத்தில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 82 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதிகளில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 82 பேர் இரண்டரை மாதங்களில் கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் வெளிவந்து நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகிய 90 பேரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது.

இதனையடுத்து பொலிஸாரின் விசேட குழு, தலைமறைவாகியவர்களை கண்டுபிடித்து கைதுசெய்யும் நடவடிக்கையை கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதி தொடக்கம் நேற்று திங்கட்கிழமைவரை மேற்கொண்டதாகவும் இதன்போது 82 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X