Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 456 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதிக்கு நீர் இணைப்பு வழங்குவதில் இன்று வரை இழுபறி நிலையே காணப்படுவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிகின்றனர்.
இவ்வருடம் ஜூன் மாதம் 21ம்திகதி இந்த வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்ட போதும் இன்று வரை நீர் இணைப்பு வழங்கப்படாமை குறித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிரதேச பொறுப்பதிகாரி எஸ்.எல்.எ.மஜீட்டிடம் கேட்ட போது, இவ்வீடமைப்பு திட்டத்தை கட்டிய சீ.ஈ.சீ.பி எனும் நிறுவனம் நாளை அல்லது நாளை மறுநாள் உத்தியோக பூர்வமாக எங்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாளை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டும் பட்சத்தில் இரு வார காலத்திற்குள் நீரிணைப்பு நடவடிக்கைகளை முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றார்.
இவ்விடயமாக தொடர்பாக கல்முனை பிரதேச செயலகத்தின் இத்த்திட்டத்திற்கு பொறுப்பான நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் பி.எஸ். சன்சீரை தொடர்பு கொண்டு வினவிய போது, "நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தங்களுடைய கடமையை முடித்தாலும் நீர் இணைப்பை வழங்குவதற்கு முன் கூட்டு ஆதன முகாமைத்துவ குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவை அமைக்க பொறுப்பாக உள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபை கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளோம்" என்றார்.
இது தொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிராந்திய உதவி முகாமையாளர் எ.மஜீட்டிடம் வினவிய போது, சட்ட ரீதியாக கூட்டு ஆதனமுகாமைத்துவ குழுவினை அந்த வீட்டுத்திட்டத்தில் அமைத்ததன் பின்னே அங்குள்ளவர்களுக்கு நீர் வழங்க முடியும்.
இக்குழுவை அமைப்பதற்கு கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையுடன் இணைந்தே மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அவர்களுக்கும் அறிவித்துள்ளோம். இன்னும் மூன்று வாரத்துக்குள் இவ்விடயக் முற்றுப் பெறும் எனத் தெரிவித்தார்.
இந்த மூன்று அரச நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகளின் கருத்துப்படி கல்முனை சுனாமி வீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு இன்னும் மூன்று வாரங்களின் பின்னரே நீரிணைப்பு வழங்கப்படும்.
இந் நீரிணைப்பானது மூன்று வாரத்தில் மக்களை சென்றடையுமா? அல்லது இன்னும் இழுபறிநிலை தொடருமா? என்பதே இந்த மக்களின் கேள்வியாக உள்ளது..
4 hours ago
6 hours ago
9 hours ago
irshana Wednesday, 02 March 2011 03:41 AM
sunami sunami
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago