2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவின் வலையமைப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான  அரச சார்பற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகார பரம்பலின் ஊடாக பொதுமக்களுடன் தொடர்புடைய அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்தி சமூகத்துக்கு தேவையை வழங்கும் நோக்குடன்  கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் தனது எல்லைப்பரப்பில் இந்த வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிரண்டு பிரதேச செயலக எல்லைகளை உள்ளடக்கிய இந்த வலையமைப்பில் பொத்துவில் தொடக்கம் கல்முனையின் நீலாவனை பிரதேசம் வரையிலான பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

12 பிரதேச செயலக மட்டத்திலும் உருவாக்கப்பட்ட பிரதேசமட்ட வலையமைப்பிலிருந்து 12 பிரதான அரசசார்பற்ற நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த பிராந்திய மட்ட வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலையமைப்பு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம் எம் சறூக்கிடம் கேட்டபோது,

“கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் கடமை பிராந்தியத்தில் சுமார் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அலுவலக கடமைகளுக்காக நான்கு அலுவலர்களே உள்ளனர். இந்த நான்கு அலுவலர்களும் எல்லா மக்களினதும் உரிமைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கண்டு கடமை புரிவது கடினமாக உள்ளது.

எனவே, சிவில் அமைப்புக்களான அரச சார்பற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து கடமை புரிவதற்கு எங்களுக்கு அதிகாரம் உண்டு. அந்த நிபந்தனைகளுக்கு அமைவாக வலையமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் இந்த வலையமைப்பின் ஊடாக பிரச்சினை தொடர்பான வேலைத்திட்ட முன்மொழிவுகளைப் பெற்று ஒன்றிணைந்து கடமையாற்றவுள்ளோம்.
 


    
   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .