Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரவணன்)
அம்பாறை, ஆலையடி வேம்பு ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்தது. இதில் 04 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
வழமை போன்று வருடாந்த உற்சவத்தின்போது ஊர்வலம் நேற்று திங்கட்கிழமை இரவு ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வாச்சிக்குடா வீதி வழியாக சென்று கொண்டிருந்தபோது ஒரு மணியளவில் இரு ழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்தது.
இச்சம்பவத்தில் 4 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இருவர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளதுடன் ஆலையடிவேம்பைச் சேர்ந்த மேலும் இருவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் இவர்களிடம் இருந்து இரண்டு வாள், கோடரி, கத்தி என்பன கைப்பற்றப்பட்டதுடன் இதில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை தேடிவருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago