2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மண்டூரிலிருந்து வெருகலுக்கு பாதயாத்திரை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் நோக்கிய பாதயாத்திரை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

21ஆம் திகதி மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரையானது அன்றிரவு கிரான்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தினை வந்தடைந்து பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டு மயிலம்பாவெளி காமாட்சியம்மன் ஆலயத்தினை அன்றிரவு வந்தடையும்.

23ஆம் திகதி இரவு வாழைச்சேனை பத்திரகாளியம்மன் ஆலயத்தை வந்தடைந்து 24ஆம் திகதி பணிச்சங்கேணி முருகன் ஆலயத்தினை வந்தடையும் இப்பாதயாத்திரையானது, 25ஆம் திகதி வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தினை சென்றடையும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .