Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
சம்மாந்துறை வளத்தாப்பிட்டிப் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் யானைகளினால் தொடர்ந்தும் சேதமாக்கப்பட்டு வருவதாக அங்குள்ள மக்கள் தமிழ் மிரருக்குத் தெரிவிக்கின்றார்கள்.
சம்மாந்துறை வளத்தாப்பிட்டிப் பிரதேசத்துக்கு அருகிலுள்ள காடுகளிலிருந்து குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் யானைகள், வீடுகளையும் பயிர்களையும் சேதப்படுத்துவதோடு, தமது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகள் தொடர்பில் செய்திகளைச் சேகரிப்பதற்காக வளத்தாப்பிட்டிப் பகுதிக்கு நாம் சென்றிருந்தபோது, காட்டுப் பகுதியிலிருந்து பொதுமக்களின் குடியிருப்புகளை நோக்கி வருவதற்கு முற்பட்ட யானைகள் எமது கமராவுக்குள் பதிவு செய்து கொள்ள முடிந்தது.
குடியிருப்புப் பகுதியை நோக்கி நகர முயற்சித்த யானைகளை பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து, காட்டுப் பகுதிக்கு துரத்தினர்.
இதேவேளை, யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, இப்பகுதியில் வனவிலங்குத் திணைக்களத்தினர், மின்சார வேலிகளை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளமை இங்கு குறிப்பிடப்பிடத்தக்கது. இருந்தபோதும், குறித்த மின்சார வேலிகளை யானைகள் உடைத்தெறிந்துள்ளன.
ஆனால், யானைகளால் உடைக்கப்பட்ட மின்சார வேலிகளை வனவிலங்குத் திணைக்களத்தினர் இதுவரை திருத்தியமைக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யானைகள் தாக்கி இப்பகுதியில் பொதுமக்கள் சிலர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago