Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
சுனாமியினால் பாதிப்படைந்த பல பிரதேசங்கள் மீளக் கட்டமைக்கப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில், ஒரு சில பகுதிகளில் சில விடயங்கள் மட்டும் - யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.
அவ்வாறானவற்றில் பாண்டிருப்பு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயமும் ஒன்றாகும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது மிக மோசமாகச் சேதமடைந்த இந்த ஆலயமானது, இன்றுவரை புனரமைக்கப்படாமல், கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றமை கவலையான விடயமாகும்.
1967 ஆம் ஆண்டு பாண்டிருப்பின் கடற்கரையை அண்மித்து நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோயில், அதற்கு முன்னர் சாய்ந்தமருதில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
1965 ஆம் ஆண்டு நிகழ்ந்த இடப்பெயர்வொன்றினை அடுத்து, இந்த ஆலயம், தற்போதைய இடத்தில் அமைக்கப்பட்டதாக இங்குள்ள மூத்த பிரஜையொருவர் கூறுகின்றார்.
சுனாமியினால் சேதமடைந்த இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு இதுவரை அரசாங்கமோ, நிறுவனங்களோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோ முன்வராதையிட்டு இப்பகுதி மக்கள் தமது கவலையினைத் தெரிவிக்கின்றார்கள்.
பாண்டிருப்புப் பிரதேசத்தில் அமையப் பெற்றிருந்த ஒரேயொரு விஷ்னு ஆலயம் இதுவாகும்.
இந்த ஆலயத்தைப் புனரமைக்க வசதியில்லாத இப்பகுதி மக்கள், தற்போது இந்த ஆலயத்துக்குப் பின்னாலுள்ள காணித் துண்டொன்றில் சிறிய கோயிலொன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால், அந்தக் கோயிலை நிர்மாணிப்பதற்கும் நிதி வசதியில்லாமல் அப்பகுதி மக்கள் தடுமாறுகின்றனர்.
எவ்வாறிருந்தபோதும், சேதமடைந்த பழைய கோயில் புனரமைக்கப்படுவதை அல்லது பழைய கோயில் இருந்த இடத்தில் புதியதொரு கோயில் நிர்மாணிக்கப்படுவதையே இந்தப் பிரதேச மக்கள் பெரிதும் விரும்புகின்றார்கள்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago