Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட மக்கள், கல்முனை பிரதேச காரியாலயத்தை தற்போது முற்றுகையிட்டுள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்போது தொடர்மாடி வீட்டில் வசித்து வரும் 390 குடும்ப இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மக்கள் கடந்த 9 நாட்களாக நீரின்றி பல்வேறு சிரமத்திற்குள்ளானர்.
இது தொடர்பில் பல தடவைகள் பிரதேச செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோதிலும், இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று காலை இம்மக்கள் இஸ்லாமாபாத்திலிருந்து கல்முனை பொதுச்சந்தையூடாக ஊர்வலமாக வந்து கல்முனை பிரதேச செயலாளர் காரியாலயத்தை முற்றுகையிட்ட இம்மக்கள், இவ்விடயத்தில் தொடர்புடையவர்களை கைதுசெய்யுங்கள். எங்களுக்கு நீரைத் தந்து எம்மை ஆரோக்கியமாக வாழவிடுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு உள்ளனர்.
இதற்கிடையில், இன்று திங்கட்கிழமை கடமைக்காக வந்த கல்முனை பிரதேச காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளே செல்லமுடியாத நிலையில் வெளியிலுள்ளனர்.
உரிய இடத்திற்கு வந்த சமயத்தலைவர்களும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் அம்மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமாபாத் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாது இவ் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
.jpg)
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025