Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை இஸ்லாமாபாத் கிராம மக்களது முற்றுகை கைவிடப்பட்டதையடுத்து கல்முனை பிரதேச செயலக பணிகள் வழைமைக்கு திரும்பியது.
சுனாமியினால் பாதிக்கப்பட்டு தற்போது இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட தொடர்மாடி வீட்டில் வசித்துவரும் 390 குடும்பங்கள் கடந்த 9 நாட்களாக நீரின்றி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கெடுத்தனர்.
இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமையால் கல்முனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பிரச்சினைக்கு தீர்வு கண்பதாக வாக்களித்ததையடுத்து மக்கள் பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறினர்.
இதனையடுத்து கல்முனை பிரதேச செயலகம் வழமை போல் இயங்கியது.
இதேவேளை சம்பந்தப்பட்ட நபர்களையும் மற்றும் கிராம முக்கியஸ்த்தர்களையும் அழைத்து விசாரணை செய்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதற்காக நாளை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு இருசாராரையும் வருமாறு பொலிஸார் பணித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .