Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தின் நிதி மோசடியுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத்திட்ட மக்கள் நீர் பிரச்சினைக்குள்ளாகியதையடுத்து, கடந்த 6ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத்திட்ட கூட்டு ஆதணசபையின் தலைவர், செயளாலர், பொருலாளர் மற்றும் அக்கிராம முக்கியஸ்த்தர்களையும் அழைத்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.என்.சிரான் பெரேரா விளக்கத்தை பதிவு செய்ததன் பின்னர்; கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்விரு சாரார்களையும் விசாரணை செய்த கல்முனை மாவட்ட நீதிபதி, கூட்டு ஆதணசபையின் பதவி வழி உறுப்பினர்களை பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததுடன்,; எதிர்வரும் 3ஆம் திகதி இவ் வழக்கு விசாரணை தொடருமென உத்தரவிட்டார்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025